Translated into Tamil
Image Courtesy:02 Page 9 - 13 A dream of red mansions
Creative Classics of China No. 009/2023
லிங் சூ ஹாய் - ஓர்அறிமுகம்...
லிங் குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளுக்கு முன் கௌரவமிக்க இரண்டாம் நிலை அதிகாரத்திற்கு உயர்த்தப்பட்டவர்கள்.
அரசாங்க முறைப்படி, இந்த கௌரவம் மூன்று தலைமுறைகள் வரை மட்டுமே தொடரும். ஆனால் அந்தப் பெருமை பொருந்திய குடும்பத்தின் பண்பாடு, கல்விச்சிறப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் சிறப்பு ஆணைப்படி அது ஐந்து தலைமுறைகள் வரை நீட்டிக்கப்பட்டது.
லிங் ஐம்பது வயதைக் கடந்தவர். தனது பரம்பரையின் கடைசி ஆண் வாரிசு. மூன்று வயதே நிரம்பியிருந்த அவரது ஒரே மகன் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், ஏராளமான அந்தப்புர மகளிர் இருந்தும் மற்றொரு ஆண் வாரிசு இல்லாததால் அவர் பெரிதும் கவலையில் ஆழ்ந்திருந்தார். என்றாலும் மனைவி நீ சியா மூலம் பிறந்த ஒரே பெண் குழந்தை தாய்யூ (கறுப்பு மரகதம்) மீது அன்பைப் பொழிந்து வளர்த்துவந்தார். அவளும் நல்ல புத்திசாலியாக, திறமையுள்ள பெண்ணாக விளங்கினாள்.
யாங் சௌ நகரை யூ சுன் வந்தடைந்த சமயம், லிங் தனது அருமை மகளுக்கு ஒரு நல்ல ஆசிரியரைத் தேடிக்கொண்டிருந்தார். ஒரு மாறுதலுக்காக வேறு ஏதேனும் நல்ல வேலையைத் தேடலாம் என்ற எண்ணத்தில் இருந்த யூ சுன், இதை ஓர் அற்புதமான வாய்ப்பாகக் கருதினார். அதிர்ஷ்டவசமாக, அவர் தங்கியிருந்த விடுதியில் முன்னாள் வகுப்புத்தோழர்கள் இருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் லிங்கிற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களின் பரிந்துரையால், லிங்கின் மகளுக்கு யூ சுன்ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
தாய் யூ வகுப்புகளுக்கு முறையாக வரவில்லை. அதனால் யூ சுன்னுக்கு ஏராளமான ஓய்வுநேரம் கிட்டியது. எப்போதாவது நடக்கும் வகுப்புகளின்போது, தாய் யூவிற்குத் துணையாக இரண்டு பணிப்பெண்கள் இருப்பார்கள்.
இவ்வாறு இரண்டு ஆண்டுகள் கழிந்தன.
தாய் யூவின் தாய் காலமானார். உடல் நலமின்றி இருந்த தன் அன்புத் தாய்க்குப் பணிவிடை செய்து, அவளுடைய ஈமச் சடங்குகளை முறைப்படி செய்து முடித்ததில், தாய் யூவின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வகுப்புகள் நீண்ட காலத்திற்கு நின்றுபோயின. இந்த வேளைகளில் யூ சுன் ஊர் முழுதும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு வந்தார்.
அப்படியொரு சுற்றுப் பயணத்தில்...
ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தஒரு பழமையான கோயிலுக்குச்சென்ற யூ சுன்,. சற்று ஓய்வெடுத்துக் கொண்டுமது அருந்தலாம் என்றுகருதி, உள்ளூர் விடுதிஒன்றில் நுழைந்தார்.
தலைநகரில்தங்கிப் படித்துக்கொண்டிருந்தபோது அறிமுகமானபழைய நண்பர் லெங்அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டார். லெங் பழமையான கலைப்பொருட்களில் அனுபவமிக்க வியாபாரி. பரந்த அறிவு மற்றும்பண்பாடு கொண்ட யூசுங்கின் மீது அவர்பெரிதும் மதிப்பு வைத்திருந்தார். நீண்டகாலத்திற்குப் பின் சந்தித்துக்கொண்ட நண்பர்களின்உரையாடல் சுவாரசியமாகத் தொடர்ந்தது. "புத்தாண்டுகொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர் சென்று, திரும்பும் வழியில் யாங்சௌ நகரில் வணிகம்செய்யும் நண்பருடன் சிலநாட்களாகத் தங்கியிருக்கிறேன். பொழுதுபோக்குக்காக இங்கேவந்தேன்" - லெங் விவரித்தார். "தலைநகரில்என்னென்ன விசேஷங்கள்? அறிந்துகொள்ளஆவலாக இருக்கிறேன்" - யூசுங் உற்சாகமாக வினவினார். "சியாவம்சத்தைச் சேர்ந்த இருபெருமை பொருந்திய குடும்பங்கள்தலைநகரில் வசிப்பது உங்களுக்குத்தெரிந்திருக்கும். ஏன், நீங்கள் கூடஅதே வம்சத்தைச் சேர்ந்தவர்தானே?" "அதுஎன்னவோ உண்மைதான். ஆனால்சியா குடும்பங்கள் நாட்டின்பல்வேறு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள். அவ்வகையில்சமூகரீதியாக மிகவும் விலகிநிற்கும் நான், எப்படிஅவர்களுக்கு உறவு என்றுசொல்லிக்கொள்ள முடியும்?" "அதுஒரு காலம். இப்போதுஇரு குடும்பங்களும் மிகவும்சீர்குலைந்து வருகின்றன.." "இதைஎன்னால் நம்ப முடியவில்லை. சென்ற ஆண்டு தலைநகர்வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியின்இருபுறமும் இரு குடும்பங்களின் மாளிகைகளும்கம்பீரமாக வீற்றிருந்தன. சீர்குலைவின்எந்த அடையாளமும் என்கண்களுக்குப் புலப்படவில்லையே!" "வெளிப்பார்வைக்கு அப்படித்தான் தெரியும். ஆனால் குலப் பெருமையைக்கட்டிக்காக்கவும், மாளிகையில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவரையும் பராமரிக்கவும் போதியபணம் அவர்களிடம் இல்லைஎன்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, முந்தைய தலைமுறையில் இருந்ததகுதியும் திறமையும் இளையதலைமுறையில் குறைந்து வருகிறதுஎன்பதையும் மறுக்க முடியாது." யூ சுன்னுக்கு வியப்பாகஇருந்தது. "பழமையும்பாரம்பரியமும் பண்பாட்டுப் பெருமையும் மிக்ககுடும்பங்களில் இளைய தலைமுறையின் கல்விநிலை குறைபாடுள்ள ஒன்றாகஇருப்பது வருத்தமளிக்கிறது. இந்தச்சூழ்நிலை எவ்வாறு உருவானது? தயவுசெய்து கூறுங்கள்." லெங் நடந்த சம்பவங்களைவிவரிக்கத் தொடங்கினார்...
Previous Chapters can be accessed in the following links attached below:
Chapter 7 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:
Chapter 6 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:
Chapter 5 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:
Chapter 4 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு- Episode 4
Chapter 3 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்பு மாடங்களின் கனவு – Episode 3
Chapter 2 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்பு மாடங்களின் கனவு – Episode 2
Chapter 1 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்பு மாடங்களின் கனவு – Episode 1
Read the preface at this link: முன்கதை
Comments