Translated into Tamil
Image Courtesy: 02 Page 9 - 13 A dream of red mansions
Creative Classics of China No. 008/2023
The Chennai Centre for China Studies (C3S) and Sahara Asia, Chennai, jointly bring to readers a series of Chinese classics and poetry in Tamil, titled “Creative Classics of China”. The series is a translation by Uma Balu, Director, Sahara Asia, Chennai & Distinguished Member, C3S.
வந்திருந்தஅதிகாரிகள்ஃபெங்கிடம்ஷியிங்பற்றிவிசாரித்தார்கள். அவரைஅழைத்துவருமாறுஆளுநர்ஆணையிட்டிருப்பதாகக்கூறினார்கள்.
"ஷியிங்என்மகளின்கணவர்.இரண்டுஆண்டுகளுக்குமுன்யாரோசிலநாடோடிபிக்குகளுடன்சென்றுவிட்டார்.அதன்பின்அவரைக்காணவில்லை" என்றார்ஃபெங்.
"அப்படியானால்அவருக்குபதிலாகநீங்கள்வாருங்கள்"என்றபடிஅதிகாரிகள்ஃபெங்கைஆளுநர்மாளிகைக்குஅழைத்துச்சென்றார்கள்.
அன்றிரவுஃபெங்வீடுதிரும்பியபோது,மிகவும்உற்சாகமாககாணப்பட்டார்.
"புதியஆளுநர்யூசுன்,சியாவம்சத்தைச்சேர்ந்தவர்.ஹூசூநகரத்தில்பிறந்து,சிறிதுகாலம்ஸூசூநகரில்வாழ்ந்துவந்தார். அப்போதுஅண்டைவீட்டில்வசித்தநமதுஷியிங்அவருக்குநெருங்கியநண்பரானார்.நேற்றுமாலைவீதியில்வலம்வந்தபோதுநமதுபணிப்பெண்ஆப்ரிகாட்அவர்கண்களில்தென்பட்டிருக்கிறாள். ஷியிங்கின்வீட்டில்அவளைக்கண்டதைநினைவில்வைத்துக்கொண்டு, அவரும்இங்குதான்இருக்கவேண்டும்என்றுஎண்ணிமகிழ்ந்து, நட்பைத்புதுப்பித்துக்கொள்ளவிரும்பி,அதிகாரிகளைநம்வீட்டிற்குஅனுப்பிவைத்திருக்கிறார்! "
ஃபெங்கின்உற்சாகம்குடும்பத்தினரைத்தொற்றிக்கொண்டது.
"ஷியிங்பிக்குகளுடன்சென்றுவிட்டதையும்,நம்பேத்திதொலைந்துபோனதையும்கேள்வியுற்றுஅவர்மிகவும்கவலையடைந்தார். அதிகாரிகளைஅனுப்பிதேடச்சொல்வதாகவாக்களித்துள்ளார். இரண்டுஅவுன்ஸ்வெள்ளியும்பரிசாகத்தந்தார்" - ஃபெங்கூறிமுடித்தார்.
அடுத்தநாள்...
ஷியிங்காட்டியஅன்புக்கும்நட்புக்கும்ஒருசிறியஅன்பளிப்பாகஅதிகாரிகள்இரண்டுவெள்ளிக்கட்டிகள்மற்றும்நான்குசாட்டின்துணிகள்கொண்டுவந்து, ஷியிங்கின்மனைவியிடம்தந்தார்கள்..
ஃபெங்கிற்கும்ஒருசெய்திவந்திருந்ததுபணிப்பெண்ஆப்ரிகாட்டைதனதுஅந்தப்புரத்தில்சேர்த்துக்கொள்ளஆளுநர்விருப்பம்தெரிவித்திருந்தார். ஃபெங்மிகுந்தமகிழ்ச்சியுடன்சம்மதித்தார். அதற்குநன்றிகூறும்வகையில்ஷியிங்கின்மனைவிக்குஆளுநர்மாளிகையிலிருந்துநூறுஅவுன்ஸ்தங்கக்கட்டிகளும்ஏராளமானபரிசுப்பொருட்களும்வந்துசேர்ந்தன.
அன்றுமாலை,பட்டுத்துணிகள்விரித்தஒருஅழகியசிவப்புபல்லக்கில்ஆப்ரிகாட்ஆளுநர்மாளிகைக்குஅழைத்துச்செல்லப்பட்டாள். அன்றுதோட்டத்தில்ஒருகணம்பரிமாறிக்கொண்டபார்வைகள்.. இன்றுஅவளுடையவாழ்க்கையில்பெரும்திருப்புமுனையாக, அதிர்ஷ்டமாகஅமைந்தன!
ஓராண்டுகடந்தது. ஆப்ரிகாட்ஒருமகனைப்பெற்றெடுத்தாள். இதற்கிடையில்ஆளுநரின்மனைவிஉடல்நலம்குன்றிஉயிரிழந்தாள்அதைத்தொடர்ந்துஆப்ரிகாட்ஆளுநரின்மனைவிஎன்றஅந்தஸ்துக்குஉயர்த்தப்பட்டாள்.
ஆளுநர்யூசுனின்வாழ்க்கை .. சற்றுப்பின்னோக்கி...
தன்னைஆதரித்துவந்தநண்பர் ஷியிங்தந்தபணத்தைப்பெற்றுக கொண்டு, தலைநகரத்தைநோக்கிப்பயணமானார்யூசுன். தேர்வில்மூன்றாவதுஉயர்ந்தநிலையைவென்று,மாகாணஅரசாங்கத்தில்அங்கத்தினராகி,தாயூசோமாவட்டத்தின்ஆளுநராகப்பொறுப்பேற்றார்.
திறமையால்தேர்ச்சிபெற்றவர்களுக்கேஉரியசிறியதலைக்கனம், அலட்சியம்.. யூசுன்மட்டும்விதிவிலக்காஎன்ன?இரண்டுஆண்டுபதவிக்காலத்தில்சகஊழியர்களைமதிக்காமல்நடந்துகொண்டார். இதனால்அவர்கள்மத்தியில்பொறாமையும், அதிருப்தியும்நிலவின.பாரம்பரியவழக்கங்களில்மாற்றங்கள்செய்ததாகஅவர்மீதுகுற்றம்சுமத்தினார்கள்.நீதிமன்றத்தில்வழக்குவிசாரணைக்குவந்தது. அவர்பதவிநீக்கம்செய்யப்பட்டார். சகஊழியர்கள்பூரிப்படைந்தார்கள்.
இரண்டுஆண்டுகளாகசேமித்துவைத்திருந்தபணம்கையில்இருந்தது. பதவிப்பொறுப்பைபுதியஆளுநரிடம்ஒப்படைத்து, அரசாங்கம்தந்திருந்தவீட்டைவிட்டுவெளியேறினார்.மனைவிமற்றும்பணிப்பெண்களுக்குத்தேவையானபணம்கொடுத்து,பிறந்தவீடுகளுக்குஅனுப்பிவைத்தார். பதவிஇழந்தாலும், அதுதந்தசுதந்திரம்மற்றும்ஓய்வுநேரத்தைக்கொண்டுமக்களிடமநேரடியாகஇடைபழகமுடிவுசெய்தார்.நாடெங்கும்சுற்றுப்பயணம்மேற்கொண்டார்.
ஒருநாள்...
யாங்சௌஎன்றஉப்புவிளைவிக்கும்மாவட்டத்தின்தலைநகரைவந்தடைந்தார்.அங்குஉப்பளங்களின்அரசாங்கதலைமைஅதிகாரியாகப்பொறுப்பேற்றிருக்கும்லிங்சூஹாய்என்பவரைப்பற்றிமக்கள்பரவலாகப்பேசிக்கொண்டார்கள்.
யூசுன்னின்பயணத்தில்மட்டுமல்ல, வாழ்க்கையிலும்அதுமுக்கிய
திருப்புமுனையாகஅமைந்தது.
Previous Chapters can be accessed in the following links attached below:
Chapter 5 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:
Chapter 5 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:
Chapter 4 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு- Episode 4
Chapter 3 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்பு மாடங்களின் கனவு – Episode 3
Chapter 2 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்பு மாடங்களின் கனவு – Episode 2
Chapter 1 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்பு மாடங்களின் கனவு – Episode 1
Read the preface at this link: முன்கதை
Comments