Translated to Tamil
Image Courtesy: 03 Page 14-29 A dream of red mansions
Creative Classics of China No. 11/2023
அரசாங்கப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறிது காலம் தனது சொந்த ஊரான யாங் சௌ என்ற சிறு நகரத்தில் வாழ்ந்து வந்தார் யூ சுங்.
தற்போது வந்த செய்தி பெரிதும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது - அதே பதவியைத் தொடர்ந்து வகிக்க அனுமதியளிக்கும் அரசாங்க ஆணை அது! ஆனால் தற்போது அதற்கு செல்வாக்கு மிகுந்த ஒருவரின் ஆதரவுக் கடிதம் தேவைப்பட்டது.
நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துவிட்டு விடைபெற்றார்கள். லெங் ஒரு யோசனை கூறினார்: யுங் குவோ அரண்மனையில் செல்வாக்கு மிகுந்தவர் லிங் - அவரிடம் கேட்டுப் பார்த்தால் என்ன?
"வந்த தகவல் உண்மைதானா என்று எதற்கும் ஒரு முறை உள்ளூர் செய்தித்தாள்களின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வோம். அதற்குப் பின் அவரிடம் கேட்கலாம்" என்றார் யூ சுங்.
செய்தியை உறுதிசெய்துகொண்டு, லிங்கிடம் தன் வேண்டுகோளைத் தெரிவித்தார்.
தற்செயலாக, லிங் ஏற்கனவே யுங் குவோ அரண்மனையில் தனது மைத்துனர் செங்கிற்கு ஓர் அறிமுகக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்!
இதற்கிடையில்...
ஷி சீமாட்டி கறுப்பு மரகதத்தை தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்ள விரும்பினார். அவளை அழைத்து வர, பணிப்பெண்கள் கொண்ட இரண்டு படகுகளை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவள் உடல் நலமின்றி இருந்ததால், சிறிது தாமதமானது. தற்போது அவள் சற்றுத் தேறியிருந்தாள்.
லிங் ஒரு யோசனை கூறினார்.
தனது அறிமுகக் கடிதத்தை அவளே சென்று கொடுப்பதைவிட, யூ சுங் அவளுடன் துணையாகச் சென்று நேரில் அறிமுகப்படுத்தி வைப்பது கௌரவமாக இருக்கும் என்றார்.
யூ சுங் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். லிங்கின் மைத்துனர் அரண்மனையில் எந்த நிலையை வகிக்கிறார் என்று கேட்டார்.
"அவர் மிகவும் எளிமையானவர். பரந்த மனம் கொண்டவர். நீங்களும் சியா வம்சத்தைச் சேர்ந்தவர்தானே! ஆகையால் தன்னம்பிக்கையோடு இயல்பாக அவரை அணுகலாம்" என்றார் லிங்.
பயணத்திற்கான ஆயத்தங்கள் தொடங்கின. வழிச்செலவுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அடுத்த மாதம் இரண்டாம் நாள் புறப்படுவதாகத் தேதி குறிக்கப்பட்டது.
ஒரு படகில் கறுப்பு மரகதமும் அவளுடைய பணிப்பெண்களும்; மற்றொன்றில் யூ சுங் அவருடைய உதவியாளர்களுடன் என பயணம்
லிங் தனது அன்பு மகளை வாஞ்சையோடு தழுவிக்கொண்டார்.
"அன்பு மகளே! நான் ஐம்பது வயதைக் கடந்துவிட்டேன். மறுமணம் புரிந்துகொள்ளவில்லை. மீதமுள்ள வாழ்நாளையும் அப்படியே கழித்துவிடுவேன். நமது வீட்டில் உனக்கு ஆலோசனைகள் கூறவோ, வழிநடத்திச் செல்லவோ உன் தாய் இல்லை. உன்னுடன் விளையாட சகோதரிகள் ஒருவரும் இல்லை. உன் பாட்டி வீட்டில் உனக்கு இரண்டுமே கிடைக்கும். இந்தப் பயணம் உன் நன்மைக்காக. உன் நல்ல எதிர்காலத்திற்காக. மகிழ்ச்சியோடு புறப்படு மகளே.."
கண்களில் நீர் தளும்ப அருமை மகளை அவர் வழியனுப்பி வைத்தார்.
யுங் குவோ அரண்மனை.
யூ சுங்கிற்கு கௌரவமிக்க முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடைய அறிமுகக் கடிதம் முன்னதாகவே அங்கு சென்றடைந்திருந்தது. தன்னிடமிருந்த மேலங்கிகளுள் சிறந்த ஒன்றை அணிந்துகொண்டு, அடையாளச் சீட்டையும் கையில் வைத்திருந்தார். கம்பீரமான தோற்றமும் அவையடக்கம் நிரம்பிய பேச்சும் அவருடைய பண்பாட்டையும் பரந்த அறிவையும் பறைசாற்றின.
யூ சுங்கிற்கு ஆதரவாக அரண்மனையில் வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குள் அவர் தலைநகரத்திற்கு அருகே உள்ள மாகாணம் ஒன்றின் ஆளுநராகப் பதவியில் அமர்த்தப்பட்டார்.
Previous Chapters can be accessed in the following links attached below:
Chapter 9 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு – Episode 9
Chapter 8 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு – Episode 8
Chapter 7 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு – Episode 7
Chapter 6 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:சிவப்புமாடங்களின் கனவு – Episode 6
Chapter 5 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:சிவப்புமாடங்களின் கனவு – Episode 5
Chapter 4 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு- Episode 4
Chapter 3 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:சிவப்பு மாடங்களின் கனவு – Episode 3
Chapter 2 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:சிவப்பு மாடங்களின் கனவு – Episode 2
Chapter 1 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்பு மாடங்களின் கனவு – Episode 1
Comentarios